27.6 C
Jaffna
March 28, 2024
லைவ் ஸ்டைல்

அளவுக்கு அதிக நேரம் வேலை செய்பவர்கள் வழக்கத்தைவிட வேகமாக இறக்கிறார்களாம்!

தற்பொழுதுள்ள கொரோனா சூழலில் பலருக்கு பணிச்சுமை அதிகரித்து இருக்கிறது. முக்கியமாக வீட்டில் இருந்து பணி செய்யும் நபர்களுக்கு, நேரடியாக வேலைக்கு சென்று செய்யும் நேரங்களை விட அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த கட்டுரையில் அதிக நேரம் வேலை செய்வதன் காரணமாக ஏன்’இறப்பு ஏற்படுகிறது என தெரிந்து கொள்வோம்.

ஒரு வாரத்திற்கு 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்வது விரைவில் இறப்பினை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாட்டு உலக சுகாதார அமைப்பின் புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக நேரம் வேலை செய்வதன் காரணமாக இறப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள். நீண்ட நேரம் வேலை செய்வதன் காரணமாக இதய நோய்கள் மற்றும் நீரழிவு நோய்கள் ஏற்படுகின்றன.

​இதய நோய்

 

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் 55 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரங்கள் வேலை செய்ததன் காரணமாக 7,45,194 பேர் இறந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வின் மூலம் அதிக நேரம் வேலை செய்வதால் பல்வேறு சுகாதார அபாயங்கள் ஏற்படுவதாக முதல் உலகளாவிய பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. இந்த 7,45,194 பேர் பக்கவாதம் அல்லது இதய நோய் காரணமாக இறந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வாகும். 2000 ஆண்டு நடத்திய ஆய்வை விட 29 சதவிகிதம் இந்த முறை அதிகரித்துள்ளது.

​ஆபத்து காரணிகள்

வாரத்திற்கு 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்வது உடல் நலத்திற்கு கேடு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இறப்பில் 72% ஆண்கள் மேற்கு பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ளவர்கள் ஆவர். வாரத்துக்கு 50 மணி நேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்வதன் காரணமாக 35% பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரத்திற்கு 35 முதல் 40 மணிநேரம் வேலை செய்பவர்களுடன் ஒப்பிடும் பொழுது, இதய நோயால் 17 சதவிகிதம் பேர் இறக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

​ஆய்வில்…

நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். தற்போது ஏற்படும் தொற்று நோய்க்கு இது ஒரு காரணம் இல்லை என்றாலும், வீட்டில் இருந்து வேலை செய்வதால் வேலைப் பழு அதிகரிப்பின் காரணமாக பிற்காலத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. தற்போது பல தொழில்களில் டெலி ஒர்கிங் எனும் முறை வழக்கமாக உள்ளது. இது வீடு மற்றும் வெளி வேலைக்கு செல்லும் நேரங்களின் இடைவெளியை குறைக்கிறது. வீட்டில் இருந்து வேலை செய்யும் நபர்கள் அதிக நேரம் வேலை செய்ய நேரிடுகிறது.

​வாரத்திற்கு நான்கு நாள் வேலை

வாரத்திற்கு நான்கு நாள் வேலை செய்வது ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும் என்று கூறப்படுகிறது. அதிக நேரம் வேலை செய்வதன் காரணமாக இளமையிலேயே இறக்க நேரிடலாம் என்ற உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும். இதற்கான விழிப்புணர்வு அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட வேண்டிய நேரம் இது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் ஒரு சில நிறுவனங்கள் தற்போது நான்கு நாள் வேலைக்கு மட்டுமே அனுமதிக்கின்றன. இதன் காரணமாக மற்ற நேரங்களில் நாம் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகிறது என்ற ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் அதிக நேரம் வேலை செய்வதால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். எனவே நாம் வேலை செய்யும் நேரத்தை அளவிட வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம். தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment