3வது புருசன் தற்கொலை: 4வது புருசன் போலீசில் கதறல்; கதிகலங்க வைக்கும் காதல் ராணி!

Date:

காதல்ராணி சந்தியாராணியின் அட்டூழியங்களால் 3வது புருசன் தற்கொலையே செய்து கொண்டிருக்கிறார். 4வது புருஷன் தன்னை காப்பாற்றுமாறு போலீசிடம் கதறிக் கொண்டிருக்கிறார்.

சந்தியா ராணியின் இந்த முரட்டு காதல் கதையை கேட்டு ஹைதராபாத் நகரமே ஆடிப்போய் இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக இருப்பவர் சந்தியா ராணி. 30 வயதே ஆன இவர் நான்கு திருமணங்களை செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவருக்கு ஒரு பெண்குழந்தையும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே 3 திருமணங்களை செய்திருந்த சந்தியா ராணி, ஹைதராபாத்தில் வேலை தேடி வந்த இளைஞர் சரண் தேஜ் உடன் பழக்கம் ஏற்பட்டு அவரையும் காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். வேறு வழியில்லாமல் சரண் தேஜ் ஒத்துக்கொண்டதால், குக்கட் பள்ளியில் உள்ள ஆரிய சமாஜ் இடத்தில் வைத்து நாலாவது திருமணம் செய்திருக்கிறார் சந்தியா ராணி.

திருமணத்திற்குப் பின்னர் சந்தியா ராணி ஏற்கனவே 3 திருமணங்களை செய்திருக்கும் விபரம் சரண் தேஜ்க்கு தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு உள்ளது. சந்தியாவின் போக்கு பிடிக்காததால் அவரை விட்டு விலக நினைத்துள்ளார் சரண் தேஜ். இதை தெரிந்துகொண்ட சந்தியா ராணி, நான் போலீஸ் உன் மீது பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சரண் தேஜை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார். தேவாலயத்தில் தான் பார்த்து வைத்துள்ள வேலையைத்தான் பார்க்க வேண்டுமென்று சரண் தேஜை கட்டாயப் படுத்தி இருக்கிறார். இதற்கெல்லாம் சரண் தேஜ் மறுத்ததால் அவரை அறைக்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்.

காவல்துறையில் இருப்பதாலும், காவல்துறையில் தனக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதாகவும் சொல்லிக்கொண்டு இந்த வேலைகளை எல்லாம் செய்து வந்திருக்கிறார் சந்தியா ராணி. அறைக்குள் அடைபட்டிருந்த சரண் தேஜ் வாட்ஸ்அப் மூலமாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு தனது நிலைமையையும் சந்தியா ராணியின் அட்டூழியத்தையும் பற்றி தகவல் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து போலீசார் சரண் தேஜை மீட்டிருக்கிறார்கள். தேஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போதுதான் சந்தியா ராணியின் தொல்லை தாங்க முடியாமல் அவருடன் ஏற்பட்ட தகராறில் மூன்றாவது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

நான்கு பேரை திருமணம் செய்து ஏமாற்றி வந்த சந்தியா ராணி குறித்து மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்