காவலருக்கு மகனாக பிறந்து, பண்ணாத முயற்சி எல்லாம் எல்லாம் மேற்கொண்டு , பின் சிறிது சிறிதாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, இன்று தமிழில் Top 5 முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
கலக்கப் போவது யாரு என்கிற காமெடி நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, அதில் வெற்றி கண்டு பின் ஜோடி நம்பர் வன் தொகுப்பாளராக மாறினார், அதன் பின் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், பின் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இன்று தமிழில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா, வாழ் என்கிற படங்களை தயாரித்து உள்ளார். இன்று வரை சிவகார்த்திகேயன் விஜய் டிவி மேடையில் தனது தந்தையின் மறைவை நினைத்து அழுததை யாராலும் மறக்கமுடியாது.
இப்படி இருக்கும் நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய எச் ராஜா அவர்கள், ஜெயபிரகாஷ் என்ற ஜெயிலரை தற்போதைய பாபநாசம் எம்.எல்.ஏ கொலை செய்ததாகவும், அவரின் மகன் தான் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் என்றும் அவர் கூறியுள்ளார். இதை கண்டு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைய, கடைசியில் சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜி. தாஸ் என்னும் அவரது மரணம் உடல்நலக்குறைவால் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.