இந்தியாவில் அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடர் நடத்தப்படுவதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.
17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் கடந்த ஆண்டே நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தோற்று பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடரை இந்தியாவில் நடத்த உலக கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 11 முதல் 30ம் தேதி வரையில் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படவிருக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1