பாலகிருஷ்ணாவை வைத்து தான் இயக்கும் படத்தில் நடிக்குமாறு த்ரிஷாவிடம் கோபிசந்த் கேட்டதாகவும், அவரும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் த்ரிஷாவை எச்சரித்துள்ளனர்.
ரவிதேஜா, ஸ்ருதி ஹாசனை வைத்து கிராக் தெலுங்கு படத்தை வெளியிட்டு வெற்றி கண்ட இயக்குநர் கோபிசந்த் தன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். தெலுங்கு திரையுலகின் சீனியர் ஹீரோவான பாலகிருஷ்ணாவை அதுவும் இரட்டை வேடங்களில் நடிக்க வைக்கப் போகிறாராம் கோபிசந்த்.
கோபிசந்த், பாலகிருஷ்ணா இணையும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த படத்தில் ஒரு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீனாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அவரின் கதாபாத்திரம் ஃபிளாஷ்பேக்கில் வருமாம்.
இந்நிலையில் மற்றொரு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்குமாறு த்ரிஷாவை அணுகினாராம் கோபிசந்த். அவரும் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கிறேன் என்று கூறிவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு வெளியான லயன் படத்தில் த்ரிஷாவும், பாலகிருஷ்ணாவும் சேர்ந்து நடித்திருந்தார்கள். இந்நிலையில் மீண்டும் பாலய்யாவுடன் ஜோடி சேரப் போகிறார்
பாலய்யா படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்கிற செய்தி அறிந்த ரசிகர்களோ, தப்பு பண்றீங்க, அவருடன் சேர்ந்து நடித்தால் உங்களின் கெரியர் காலியாகிவிடும். பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நடிக்க முடியாது என்று கூறி பிற நடிகைகள் தெறித்து ஓடும்போது உங்களை கேட்டிருக்கிறார்கள். யோசித்து முடிவை மாற்றுங்கள் த்ரிஷா என தெரிவித்துள்ளனர்.
அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கை
பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் தான் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் த்ரிஷாவின் பெயர் அடிபடுகிறது. முன்னதாக ஸ்ருதி சம்மதம் தெரிவித்ததை பார்த்த ரசிகர்கள் அவரை எச்சரித்தனர். அப்படி என்றால் பாலய்யா படத்தில் இருந்து ஸ்ருதி விலகிவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
பாலகிருஷ்ணாவை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு ஹீரோயின் தேடுவதே பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பாலகிருஷ்ணாவுக்கு ஹீரோயினாக நடித்தால் இளம் ஹீரோக்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்று இளம் நடிகைகள் பயப்படுகிறார்களாம்.
பாலகிருஷ்ணா தற்போது போயபட்டி சீனு இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் பாலய்யாவுக்கு ஜோடியாக பிரக்யா ஜெய்ஷ்வால் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.