வடமராட்சி கிழக்கில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் தப்பியோட்டம்; முள்வேலிக்குள் சிக்கியவர் கைது!

Date:

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த மூவர் தப்பித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டவராவார். தப்பித்தவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அத்துடன், சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு அதனைக் கடத்த பயன்படுத்தப்பட்ட ஹன்டர் வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மணலை ஏற்றியவாறு வந்த ஹன்டர் வாகனத்தை சிறப்பு அதிரடிப் படையினர் மறித்துள்ளனர். எனினும் கட்டளையை மீறி பயணித்த ஹன்டரின் சில்லுக்கு சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதனால் ரயர் வெடித்து கட்டுப்பாட்டையிழந்த ஹன்டர் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனையடுத்து அதில் பயணித்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஒருவர் மட்டும் முள் கம்பிக்குள் சிக்கியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...

மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள சில அதிகாரிகள் சட்டவிரோத சுருக்கு வலையின் ஆதாரத்தை அழித்து நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தி வருகின்றனர்

மட்டக்களப்பு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை கடற்றொழில் நீரியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்