26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
சினிமா

வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது!

’வலிமை’ திரைப்படம் நடிகர் அஜித் குமார் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்.கே.சுரேஷ். அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படம் சம்பந்தமான அறிவிப்பிற்காக ஓராண்டாக காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அஜித்தை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத். இந்த மாதம் 1 ஆம் தேதி வெளியாவதாக இருந்த வலிமை திரைப்படத்தின் அப்டேட் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படம் குறித்த சூப்பர் செய்தியினை பகிர்ந்துள்ளார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.

நீண்ட் காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு இரணடாவது முறையாக அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர்.

இந்நிலையில் அஜித்தின் வலிமை படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை நடிகர் ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது வலிமை படத்தில் அஜித் சில அவுட் ஸ்டாண்டிங் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து உள்ளதாகவும், வலிமை படம் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வலிமை திரைப்படம் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டுவரும் ஒரு படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வலிமை திரைப்படம் குடும்ப பின்னணியில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மே 1 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் வலிமை அப்டேட், கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதால் வருத்தத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு, ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த செய்தி உற்சாகத்தை அளித்துள்ளது.

வலிமை திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் இடம் பெறும் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டியுள்ளது. வலிமை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை, ராகுலின் ரோமியோ பிக்சர்ஸும், அன்பு செழியனின் கோபுரம் சினிமாஸும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: விஜய் பட நாயகி விளக்கம்!

Pagetamil

இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Pagetamil

Leave a Comment