24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
சினிமா

பணத்திற்கு பின்னால் ஓடுபவன் நான் இல்லை ; விஜய் சேதுபதி விளக்கம்!

விஜய் சேதுபதி பணத்தாசையில் தான் இப்படி அடுத்தடுத்து புது வாய்ப்புகளை ஏற்றுக் கொள்கிறார் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

கோலிவுட்டின் பிசியான நடிகர் யார் என்று சின்னக் குழந்தையை கேட்டாலும் அது விஜய் சேதுபதி என்று சொல்லும். அந்த அளவுக்கு மனிதர் கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். டேட்ஸ் பிரச்சனையால் சில படங்களில் இருந்து விலகவும் செய்கிறார்.

அவரை வைத்து படம் எடுக்க பலர் வரிசையில் நின்று கொண்டிருக்க சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கிளம்பிவிட்டார். அவர் ஹெலிகாப்டரில் பறந்து வந்த வீடியோவை அடுத்து அவரே சமைத்து, சாப்பிட்டு, தட்டை கழுவி வைத்த ப்ரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை உறுதிசெய்யவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு பணம் மீது ஆசை வந்துவிட்டது. அதனால் தான் இப்படி நிம்மதியாக மூச்சுவிடக் கூட நேரம் இல்லாமல் கமிட்டாகி வருகிறார் என்று பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் தனக்கு பணத்தாசை எல்லாம் இல்லை என்று விஜய் சேதுபதி விளக்கம் அளித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது,

எந்த படத்தையும், டிவி நிகழ்ச்சிகளையும் பணத்துக்காக ஒப்புக் கொள்வது இல்லை. நான் ஒரு நாளும் பணத்திற்கு பின்னால் ஓடுபவன் இல்லை. ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புகிறேன் என்றார்.

பெரிய திரையை பொறுத்த வரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. மாஸ்டரை அடுத்து மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. அது தான் கமல் ரசிகர்களுக்கு கவலையே.

மாஸ்டர் படத்தில் ஹீரோ விஜய்யை விட வில்லன் விஜய் சேதுபதி தான் கெத்தாக இருந்தார். அதே மாதிரி விக்ரமிலும் நடந்துவிடக் கூடாது என்பது தான் கமல் ரசிகர்களின் வேண்டுதல்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

Leave a Comment