நாட்டில் நேற்று கம்பஹா மாவட்டத்தில் இருந்தே அதிக அளவில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்று நாடு முழுவதிலுமிருந்து 3,623 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 151,343 ஆக உயர்ந்தது.
நேற்று, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 761 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து 493 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 275 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 265 பேர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 218 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 233 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 203 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 139 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 124 பேர், ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் இருந்து 113 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து106 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 94 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 88 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 83 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 77 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 74 பேரும், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 62 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 53 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 36 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 31 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 21 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 14 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 9 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 7 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 பேர், வெளிநாட்டிலிருந்து வந்த 32 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.