25.4 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இந்தியா

தினமும் 190 தெரு நாய்களுக்கு சிக்கன் பிரியாணி சமைத்துப் போடும் உன்னத மனிதர்!

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் ரஞ்ஜீத் நாத். இவர் தினமும் 190 தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார். உணவென்றால் சாதாரண உணவல்ல, தினமும் சிக்கன் பிரியாணி தான். தெரு நாய்கள் தன் குழந்தைகள் போல, உயிருள்ள வரை இந்த பணியை செய்வேன் என கூறுகிறார் ரஞ்ஜீத் நாத்.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை ஒரு வழி செய்துவிட்டது. உண்மையில், இன்னும் இந்தியாவை படாதபாடு படுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் வணிக ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில், தெரு விலங்குகளுக்கு உணவளிப்பது என்பது மிக கடினமான காரியம். ஆனால், அதை மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் தினமும் செய்து வருகிறார். ஏறத்தாழ 190 தெரு நாய்களுக்கு சிக்கன் பிரியாணி சமைத்து அளித்து வருகிறார்.

ரஞ்ஜீத் நாத் எனும் இவர் 40 கிலோ பிரியாணி சமைத்து, 190 தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

ரஞ்ஜீத் நாத்:

கடந்த புதன் அன்று (19-05-2021) ANI செய்திகளுக்கு பேசிய ரஞ்ஜீத், “நான் புதன், ஞாயிறு மற்றும் வெள்ளி கிழமைகளில் பிஸியாக இருப்பேன், காரணம், தெரு நாய்களுக்காக 30-40 கிலோ பிரியாணி சமைத்து கொண்டிருப்பேன். அவை எனக்கு குழந்தைகள் போல. நான் உயிரோடு உள்ள வரை இந்த பணியை தொடர்ந்து செய்வேன், இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறி இருந்தார்.

ரஞ்ஜீத் நாத்’ன் நாள் பிரியாணியில் தான் துவங்குகிறது. மதியம் பிரியாணியை சமைக்க துவங்கும் இவர், மாலை 5 மணிக்கு நகரம் முழுக்க தனது பைக்கில் சுற்றி, காணும் நாய்களுக்கு எல்லாம் உணவளிக்கிறார்.

“நான் முக்கியமாக 10-12 இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளேன். என் குழந்தைகள் (தெரு நாய்கள்) என்னை நன்கு கண்டறிந்து கொள்வார்கள். என்னை பார்த்ததுமே, என்னை நோக்கி ஓடி வருவார்கள். நான் பூனைகளுக்கு உணவளிக்கிறேன்” என ரஞ்ஜீத் நாத் கூறுகிறார்.

Image

“நான் சமைக்கும் பிரியாணியில் பீஸ்கள் குறைவாக தான் இருக்கும். அவைக்கு பிடித்தவாறு, நிறைய எலும்பு துண்டுகள் சேர்த்து சமைப்பேன். மேலும், எலும்பு துண்டுகள் விலை குறைவாகவும் கிடைக்கிறது. இதனால், நான் நிறைய தெரு நாய்களுக்கு உணவளிக்க இயல்கிறது. கடந்த மாதம் வரை, இந்த பணிக்கான செலவு பெரும்பாலும் நான் என் சொந்த பணத்தில் இருந்து தான் எடுத்து பயன்படுத்தி வந்தேன்” என மேலும் குறிப்பிட்டிருந்தார் ரஞ்ஜீத் நாத்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் முன்னாள் காதலருக்கு தூக்கு தண்டனை

Pagetamil

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

Pagetamil

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

Leave a Comment