27.9 C
Jaffna
April 8, 2025
Pagetamil
இலங்கை

அடையாளம் காணப்படுபவர்களை விட 3 மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில்!

தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை விட மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அவ்வாறானவர்களால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

´நேற்று மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதற்கும் அதிகமான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்க கூடும். 3,500 ஐ போல் மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். அவர்கள் மேலும் நோய் பரவ வழிவகுக்க கூடும்.

சுகாதார சிக்கல் உள்ளவர்கள் அதிகரித்த தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். வைத்தியசாலைகளில் நெரிசல் ஏற்படுகிறது. ஒட்சிசன், வைத்திய உபகரணங்களிற்கு தேவையும் அதிகரித்துள்ளர்.

மக்களை வீட்டில் இருக்குமாறு கோரினால் மக்கள் அவ்வாறு நடந்துக்கொள்வதில்லை. வீதிகள் வெறுமையடைய வேண்டும். ஆகவே, தொற்றை தவிர்க்க வேண்டுமானால் தேவையான விடயங்களுக்கு மாத்திரம் மக்கள் வெளியில் செல்வது நல்லது.

மக்கள் இரண்டு வாரங்களிற்கு வீடுகளில் இருக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, சுகாதார அதிகாரிகளுக்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பது குறித்த சுற்று நிரூபம் குறித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேயிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், சுகாதார அமைச்சின் அரச பணியாளர்களுக்கு ஒழுக்க கட்டுப்பாடு இருப்பதாக கூறினார்.

மேலும் உண்மையான தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டல்லவா என கேட்கப்பட்ட கேள்விக்கு, அதில் எந்தவித உண்மையும் இல்லை. உண்மையை மறைத்தால் நாமும் மறைந்து போவோம் எனவும் பதில் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்!

Pagetamil

இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் யாழ் வருகை!

Pagetamil

பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!