25.8 C
Jaffna
January 5, 2025
Pagetamil
சினிமா

சினிமா ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி! -இயக்குநர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்..

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த செய்தி அறிந்த சினிமா ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் இருந்த இயக்குநர் வசந்தபாலன் தான் வீடு திரும்பியது குறித்து ஃபேஸ்புக்கில் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார்.

கொரோனாவின் இரண்டாம் அலையை இந்தியர்களால் எப்பொழுதுமே மறக்க முடியாது. அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. தமிழ் திரையுலகினர் கொரோனாவுக்கு சில திறமைசாலிகளை பறிகொடுத்துவிட்டு கவலையில் இருக்கிறார்கள். நேற்று மட்டும் இரண்டு மரண செய்தி. இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனாவால் இறந்துவிட்டார் என்று காலையில் செய்தி வெளியானது. அடப்பாவமே என்று பலரும் அதிர்ச்சி அடைந்த நேரத்தில், நடிகர் நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார் என தகவல் வெளியாகி அவர்களை பேரதிர்ச்சி அடைய வைத்தது.

இயக்குநர் வசந்தபாலன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அதுவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் நண்பரான இயக்குநர் லிங்குசாமி பிபிஇ சூட் அணிந்து சென்று அவரை சந்தித்து பேசினார். இது குறித்து வசந்தபாலன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட போஸ்ட் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் வசந்தபாலன் குணமடைந்து நேற்று வீடு திரும்பியிருக்கிறார். கொரோனா மரண செய்திகளுக்கு இடையே வசந்தபாலன் வீடு திரும்பிய செய்தி ரசிகர்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறது.

வீடு திரும்பியது குறித்து வசந்தபாலன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மருத்துவமனையின் அத்தனை சங்கிலிகளிலிருந்தும் விடுபட்ட சிட்டுக்கிருவியாய் நேற்றிரவு இல்லம் திரும்பினேன்.

ஒரு மாத பூர்ண ஓய்வுக்கு பிறகு மெல்ல என் பணிக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அபாயக்கட்டத்தைக் கடக்க நட்பின் கரங்களால் பேருதவி செய்த சில உயர்ந்த உள்ளங்களை நினைவு கூறாமல் என் கடமை தீராது. கொரானாத் தொற்று ஏற்பட்ட முதல் தினத்தில் இருந்து

எனக்கான மருத்துவ ஆலோசனைகளை சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் வழங்கியவண்ணம் இருந்தார். ஆனால் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிறைந்து வழிந்ததால் நானே முடிவெடுத்து வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டதில் காய்ச்சல் குறையவில்லை. சகல வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து விடுங்கள் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தினார். ஆனால் என் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு என் இல்லம் அருகே உள்ள சின்ன மருத்துவமனையில் சேர்ந்தேன். குழந்தை மருத்துவர் ஆல்பர்ட் அவர்கள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அங்கு சேர்ந்த பிறகு வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் என் உடல்நிலை மோசமான சூழ்நிலையை எட்டியபடியிருந்தது என்றார்.

தயாரிப்பாளர்கள் Jsk சதீஷ்குமார் அவர்களும், தயாரிப்பாளர் டி.சிவா அவர்களும் எனை பெரிய மருத்துவமனைக்கு மாறிவிடும்படி எச்சரித்தவண்ணம் இருந்தனர். அன்றிரவு எனக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் என் நுரையீரல் மருத்துவமனையில் சேர்ந்த போது ஏற்பட்ட பாதிப்பை விட மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாகவும் காட்டியது. நண்பன் வரதன் அந்த சிடி ஸ்கேனை மருத்துவர் சிவராமனுக்கு அனுப்ப அவர் உண்மையில் மிகவும் பதறி…….வரதன் மிக அவசரம் ! மிக அவசரம் ! தவற விடும் நொடிகள் மிக ஆபத்தானவை என்று அறிவுறுத்தி எட்டு திசையும் எனக்கான மருத்துவமனைக்கு போராடி, கடைசியில் உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மதிப்பிற்குரிய ராதாகிருஷ்ணன் மற்றும் உதயசந்திரன் அவர்களைத் தொடர்புக்கொண்டு அப்போலோவில் தொற்று நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ராமசுப்ரமணியம் அவர்களிடம் உரையாடி என் நிலமையை எடுத்துரைத்து எனக்கான ஒரு படுக்கையை மருத்துவர் கு.சிவராமன் அப்போலோவில் பெற்று விட்டார் என்று மேலும் தெரிவித்துள்ளார் வசந்தபாலன்.

அதிகாலையிலே எனை மருத்துவமனை மாற்றும் முயற்சி பற்றி நண்பர் வரதன் சொன்னான். “அப்போலாலாம் நமக்கு சரியா வருமாடா…நாமளலாம் மிடில்கிளாஸ் என்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்துவிடு” என்று கெஞ்சினேன். “வாயப்பொத்திக்கிட்டு சும்மாயிரு” என்றபடி நான் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டேன். எனை பரிசோதித்த மருத்துவர் ராமசுப்ரமணியம்

‘ஒரு உயிர்காக்கும் மருந்தின் பெயரை உச்சரித்து இந்த மருந்து அது எங்கள் மருத்துவமனையில் இப்போது ஸ்டாக் இல்லை எங்கிருந்தாவது இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் தருவியுங்கள்..ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என்று அறிவுறுத்தினார். மீண்டும் எட்டுதிசைக்கும் வரதனுக்கு போராட்டம்…..திசையெங்கும் கைகளை நீட்டியிருக்கிறான். தன் போனில் உள்ள அத்தனை போன் நம்பர்களுக்கும் இரவு தகவலை பரிமாறி யிருக்கிறான்.

ஒரு பக்கம் இயக்குநரும், என் குருவுமான ஷங்கர் சார் அவர்கள், லிங்குசாமி, இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் உயர்திரு Jsk சதீஷ்குமார், T.சிவா சார் , மதுரை பாராளுமன்ற எம் பி. சு.வெங்கடேஷன், நடிகர் பார்த்திபன், நடிகர் அர்ஜுன் தாஸ் என தொடங்கி அந்த நண்பர்கள் லிஸ்ட் மிகப் பெரியது.

அத்தனை பேரும் என் நேசத்துக்குரியவர்கள். மருத்துவர் சிவராமனின் இடையறாது போராட்டத்தில் உயர்திரு ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் அவர்களின் தயவில் அந்த உயிர்காக்கும் மருந்து மருந்துவமனைக்கு ஐந்து மணி நேரத்திலே வந்து சேர்ந்தது. என் ரத்த நாளங்களில் ஏற்றப்பட்ட

48 மணி நேரம் கழித்து நான் அபாயக் கட்டத்தைக் கடந்தேன். வரதன் அழைத்தான்

பொழச்சுக்கிட்ட என்றான்

தெரியும் என்றேன்.

இதற்கு முழுக் காரணம்

ஒரே பெயர்

அது டாக்டர் கு.சிவராமன்

டாக்டர்கு.சிவராமன்

டாக்டர் கு.சிவராமன்

டாக்டர் கு.சிவராமன்

என்று அழுத்தி சொன்னான்.

நன்றி நவிழ்ந்து

மருத்துவர் கு. சிவராமன் அவர்களுக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினேன்.

நன்றி

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

Leave a Comment