25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா சினிமா

விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

கடந்த சில ஆண்டுகளாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த். கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார் விஜயகாந்த்.

சட்டசபை தேர்தலிலும் கூட சுற்றுப் பயணம் மேற்கொண்ட விஜயகாந்த், பொதுமக்களிடம் கையசைத்து மட்டும் வாக்கு கேட்டார். சட்டசபை தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக தோல்வி அடைந்தது. இதன்பின்னர் அரசியல் நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகளை மட்டும் விஜயகாந்த் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 3 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

Leave a Comment