எது சிறந்த முகக்கவசம்?; எப்படி அணிய வேண்டும்?: நிபுணர்கள் விளக்கம்!

Date:

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால், நல்ல தரமான முகக்கவசத்தை அணிவதன் முக்கியத்துவத்தை நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலாவிகே, N95 முகக்கவசங்கள் சிறந்த பாதுகாப்பை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

அறுவைசிகிச்சை முகக்கவசங்கள் சரியான முறையில் அணிந்தால் பாதுகாப்பையும் வழங்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க இரட்டை முகக்கவசங்கள் அணிவது சிறந்தது.  ஒரு துணி முகக்கவசத்துடன் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அணியலாம் என்றும் தெரிவித்தார்.

வெறும் துணி முகக்கவசத்தை அணிவது பொருத்தமற்றது என்றார்.

சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.எம். ஆர்னோல்ட் தெரிவிக்கையில், முகத்தை முழுமையாக மூடும் முறையே சிறந்தது என்றார்.

யாராவது இரட்டை முகக்கவசத்தை அணிய ஆர்வமாக இருந்தால், முதலில் ஒரு அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அணிய வேண்டும், பின்னர் அதை துணியால் செய்யப்பட்ட முகக்கவசத்தால் மூட வேண்டும்.

இரட்டை முகக்கவசத்தை அணிவது  வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதை தடுக்க உதவும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி எச்சங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி காபன் பரிசோதனை செய்வதில் எமக்கு நம்பிக்கையில்லை: காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்க செயலாளர் ஜெனிதா!

செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வில் மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவுக்கு காபன்...

மன்னாரில் இராணுவ ஜீப் விபத்து: ஒருவர் பலி

தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் வேகமாக வந்த இராணுவம் பயணித்த வாகனம்...

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்