25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil
இலங்கை

வணிக முகாமைத்துவ பீடத்தில் எவருக்கும் தொற்று இல்லை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த எவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று பி. சி. ஆர் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி வணிக முகாமைத்துவ பீடத்தின் சமகால சர்வதேச ஆய்வியல் மாநாடு இடம்பெற்றிருந்த நிலையில், அந்தப் பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். அதனையடுத்து பீடத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு, பீடத்தைச் சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 74 பேருக்கும் இம்மாதம் 6 ஆம் திகதி பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நல்லூர் பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பெறப்பட்ட மாதிரிகள் யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பரிசோதனைகளின் முடிவில் 74 பேரில் எவருக்கும் தொற்று இல்லை என்று கடந்த 07 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், தொற்றுக்குள்ளான விரிவுரையாளருடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று பொதுச் சுகாதார பரிசோதகரால் அடையாளப்படுத்தப்பட்ட 19 பேர் மீண்டும் கடந்த 8 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரிடமும் கடந்த 13 ஆம் திகதி மீளவும் பி. சி. ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளின் படி அவர்களிலும் எவருக்கும் தொற்று இல்லை என்று நேற்று மாலை வெளியான முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

பாராளுமன்றத்தில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

east tamil

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

east tamil

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

east tamil

Leave a Comment