யாழ்ப்பாண பல்கலைகழக அஞ்சலி எதிரொலி: பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் பொலிசாரின் பிடியில்!

Date:

யாழ்ப்பாண பல்கலைகழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொல்சாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை யாழ்ப்பாண பல்கலைகழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் மாணவர்கள் விளக்கேற்றி அஞ்சலி செய்ததை தொடர்ந்து, அதற்கு ஏன் அனுமதித்தீர்கள் என குறிப்பிட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்காமல் இன்று காலை முதல் ஏராளம் இராணுவம், பொலிசார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், மாணவர்கள் யாரும் அஞ்சலிக்கு வரவில்லை.

இதையடுத்து, பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து விலகி சென்றனர். அத்துடன், மாணவர்களை அஞ்சலிக்கு அனுமதிக்கக்கூடாதென்றும் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு படங்கள் வெளியாகியிருந்தன.  இதையடுத்து, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் பொலிசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்