யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி .இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட தரப்பினர் இன்று காலை நந்திக்கடலில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பிரதேசங்கள் முழுமையான இராணுவ வலயங்களாக்கப்பட்டு, பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.கே.சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன், நிஷாந்தன் சுவீகரன் உள்ளிட்டவர்கள் இன்றுகாலை 10 மணியளவில் அஞ்சலி செலுத்தினர்.
நந்திக்கடலோரத்தில் பதாதை கட்டப்பட்டு, விளக்கேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

