துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல தீர்ப்பு இன்று!

Date:

உத்தேச கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் அறிவிக்கப்படும்.

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் இடம்பெற்றது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான நீதிபதிகள் குழாமினால் பரிசீலிக்கப்பட்டது. நீதிபதிகள் புவனேக அலுவிஹர, பிரியந்த ஜெயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் குழுவில் அங்கம் வகித்தனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மாற்று கொள்கைகளிற்கான மத்திய நிலையம், ட்ரான்பரன்ஷி இன்ரநஷனல், ஐக்கிய மக்கள் சக்தி,  ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜேவிபி மற்றும் சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல  தரப்புக்களால் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த சட்ட வரைபு மூலம் ஒரு ஆணைக்குழுவை நிறுவுவது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சவால் செய்கிறது என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் நாளை மற்றும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதன்படி, இந்த சட்டமூலம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையம். புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் விதிமுறைகள், 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் உத்தரவு, நிதிச் சட்டத்தின் கீழ் உத்தரவு, 2006 ஆம் ஆண்டின் 11 ஆம் திகதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரிச் சட்டத்தின் கீழ் உத்தரவு, எட்டு உத்தரவுகள் சிறப்பு பொருட்கள் வரிச் சட்டத்தின் கீழ், மூலோபாய அபிவிருத்தி திட்டங்கள் சட்டத்தின் கீழ் இரண்டு உத்தரவுகளும், அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ஒரு ஒழுங்குமுறையும் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்பட உள்ளது, வாய்வழி கேள்விகளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்