நாஞ்சில் விஜயன் தற்போது பீட்சா மாஸ்டராக மாறி இருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவி காமெடியன் நாஞ்சில் விஜயன் தற்போது சொந்தாமாக கடை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் அவர் பீசா மாஸ்டராக மாறி இருக்கிறார்.
விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியில் வரும் சிரிச்சா போச்சு மூலமாக பாப்புலர் ஆனவர் நாஞ்சில் விஜயன். அவர் பெண் வேடமிட்டு அந்த ஷோவில் செய்யும் அட்ராசிட்டி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். விஜய் டிவியின் மற்ற பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார் அவர்.
நாஞ்சில் விஜயன் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர் சொந்தமாக ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார். அதில் அவர் நடித்துவரும் வெப் சீரிஸை வெளியிட்டு வருகிறார். அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
சென்ற வருடம் ரௌடிகள் சிலர் நாஞ்சில் விஜயனின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு சூர்யதேவி தான் காரணமா என அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த சர்ச்சை சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிபிடத்தக்கது.
நாஞ்சில் விஜயன் முகத்தில் காயத்துடன் இது பற்றி அளித்த பேட்டிகளும் வைரல் ஆகின.
பீட்சா மாஸ்டராக மாறிய நாஞ்சில் விஜயன்
இந்நிலையில் நாஞ்சில் விஜயன் சென்னை வளசரவாக்கத்தில் ஒரு கடை தொடங்கி நடத்தி வருகிறார். அதன் திறப்பு விழாவுக்கும் விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் வந்திருந்தார்கள்.
அவரது கடையில் தற்போது பீட்சா மாஸ்டராக மாறி இருக்கிறார் நாஞ்சில் விஜயன். அதை அவரே இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அவரது உழைப்பை பாராட்டி வருகின்றனர். மேலும் கடையில் இருக்கும்போது மாஸ்க் போடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.