மாதவிடாய் வயிறு வலி, அதிக உதிரபோக்கு இரண்டுக்கும் தீர்வாகும் அருகம்புல் மாதுளை இலை கஷாயம்!

Date:

மாதவிடாய் காலம். பெண் பிள்ளைகள் பருவமடைந்த காலம் முதல் தங்கள் நடுத்தர வயது வரையில் மாதந்தோறும் எதிர்கொள்ளும் ஒரு நிகழ்வு. இந்த நேரத்தில் வயிறு வலி என்பது பொதுவானது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பலவிதமான அசெளகரியங்களை எதிர்கொள்கிறார்கள். அதில் ஒன்று உடல் உபாதை. வயிறு வலி, அடிவயிறுவலி, இடுப்பு வலி, பெண் உறுப்பில் வலி, தொடை வலி, மார்பு வலி என வயதுக்கேற்ப ஒவ்வொரு விதமான வலியை எதிர்கொள்கிறார்கள்.

பெரும்பாலும் வயிறுவலியை உண்டாக்கும் இந்த மாதவிடாய் சுழற்சி காலத்தில் வலியை தவிர்க்க முடியாது. ஆனால் இதை கட்டுப்படுத்தலாம். அதேபோன்று அதிக உதிரபோக்கையும் கட்டுப்படுத்தும் மாதுளை இலை அருகம்புல் வைத்தியம் குறித்து தெரிந்துகொள்வோம்.

மாதவிடாய் கால நாட்களில் பெண்கள் ஒரே இடத்தில் முடங்கி விடுவார்கள். உடல் உபாதைகள் மன ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கும். இதனால் சோர்வை அதிகமாகவே உணர்வார்கள். இது எல்லா பெண்களுக்கும் நிகழும் என்று சொல்ல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் இருக்கும். மாதவிடாய் வயிறு வலி டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை நீக்க வீட்டுக் குறிப்புகள், home  remedies for menstrual pain relief– News18 Tamil

 

மாதவிடாய் காலத்தில் ஒற்றைத் தலைவலி, அடிவயிற்றில் வலி, முதுகு வலி, வாந்தி, கால் வலி என வெவ்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் வயிறு வலி பொதுவான பிரச்சனை. சிலருக்கு வயிறு வலி மிக தீவிரமாக இருக்கும். வயிறுவலியை தடுக்க வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துகொள்வதை காட்டிலும் கைவைத்திய முறையை செய்து கொள்வதன் மூலம் பாதுகாப்பாக வலியை எதிர்கொள்ளலாம்.

​அதிக உதிரபோக்கு

இன்று பெண்பிள்ளைகள் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரபோக்கை எதிர்கொள்கிறார்கள். அதிகமான உதிரபோக்கு தொடர்ந்து இருந்தால் அவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு உண்டாகும். அதை தொடர்ந்து இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். இதனால் உடல் பலவீனமாகும். உடலில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படும்.

உடலில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் உதிரபோக்கு தொடர்ந்து அதிகமாக இருந்தால் அதற்கு கை வைத்தியம் மூலம் கட்டுக்குள் கொண்டு வர எளிமையான வைத்தியங்கள் உண்டு. மாதவிடாய் காலத்தில் அதிக உதிரபோக்கு , அதிக வயிறு வலி இருந்தால் இரண்டையும் போக்கும் கைவைத்தியம் குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.

​அருகம்புல் மாதுளை இலை வைத்தியம்

தேவை

அருகம்புல் – 10 கிராம்

மாதுளை இலை – 10 கிராம்

இரண்டையும் 100 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து 50 மில்லியாக மாறும் வரை வைத்து இறக்கி வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிக்க வேண்டும். தேவையெனில் தேன் சேர்த்து குடிக்கலாம். தினமும் காலை, மாலை என இரண்டு வேளை மாதவிடாய் கால நாட்களில் தொடர்ந்து 5 நாட்கள் வரை குடிக்கலாம். இதே போல் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் குடித்து வர வேண்டும்.

வெறும் வயிற்றில் காலையில் குடித்து அரை மணி நேரம் கழித்து தான் மற்ற பொருள்களை எடுக்க வேண்டும். மாலையில் இதை குடிப்பதற்கு முன்பு 1 மணி நேரமும், அதற்கு பின்பு 1 மணி நேரமும் எதையும் சாப்பிட கூடாது. இப்படி செய்து வந்தால் மாதவிடாய் நேர உதிரபோக்கும், வயிறுவலியும் தீவிரமாகாமல் கட்டுக்குள் கொண்டு வரும்.

​நன்மைகள்

அருகம்புல் உடல் வெப்பத்தை குறைக்கும். மாதவிடாய் காலத்தில் உடல் உஷ்ணத்தால் வயிறு வலி அதிகரிப்பதை தடுக்க செய்யும். வயிற்றுப்புண்களை ஆற்றும் வல்லமை அருகம்புல்லுக்கு உண்டு. இது உடலில் ரத்தத்தை சுத்தம் செய்யும். வெள்ளைப்படுதலை குணமாக்கவும் செய்யலாம்.!

மாதுளை இலை வயிறு தொடர்பான பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். மாதுளை இலை உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாதுளை இலையை தேநீராக்கி குடித்தால் தொற்றுக்கிருமிகள் தொல்லை நீங்கிவிடும். இவை இரண்டுமே பக்கவிளைவுகள் இல்லாதவை. மாதவிடாய் வயிறு வலி, அதிக உதிரபோக்கு போன்றவை இருந்தால் இந்த வைத்தியம் கைகொடுக்கும்.

குறிப்பு

மாதவிடாய் உதிரபோக்கு, வயிறு வலி போன்றவை வேறு ஏதேனும் உடல் ஆரோக்கிய குறைபாட்டால் வந்திருந்தால் அதற்கு இந்த வைத்தியம் கைகொடுக்காது. நீங்கள் இந்த கைவைத்தியம் செய்வதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்