26.1 C
Jaffna
January 25, 2025
Pagetamil
மருத்துவம் லைவ் ஸ்டைல்

அதிகமான சுடு தண்ணீர் குடித்தால் ஏற்படும் விளைவுகள்!

கொரோனா வைரஸைத் தடுக்க, சிலர் தினமும் சூடான நீரை குடித்து வருகிறார்கள். கோடைகாலத்தில், சூடான நீரைக் குடிப்பதால் உங்கள் தாகத்தைத் தணிக்க முடியாது. ஆனால் உங்கள் தொண்டையை சுத்தமாக வைத்திருக்க இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் சூடான நீரை அதிகமாக உட்கொள்வது பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

◆ உடலின் உள் உறுப்புகளை சேதப்படுத்தும்:

சூடான நீரை மீண்டும் மீண்டும் குடிப்பதால் உடலின் உள் உறுப்புகள் எரியும் அபாயத்தை உருவாக்க முடியும். உட்புற உடல் உறுப்புகளின் திசுக்கள் மிகவும் உணர்திறன் கொண்டவையாகும். மேலும் அதிக வெப்பநிலை அவற்றை பாதிக்கும் மற்றும் கொப்புளங்களை ஏற்படுத்தும்.

◆ சிறுநீரகங்களை சேதப்படுத்தும்:

நமது சிறுநீரகங்களில் ஒரு சிறப்பு அமைப்பு உள்ளது. இது உடலில் இருந்து அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. மேலும் ஆராய்ச்சியின் படி, அதிக அளவு சுடு நீர் சிறுநீரகங்களுக்கு இயல்பை விட அதிக அழுத்தத்தை அளிக்கிறது. மேலும் இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சிறுநீரகங்கள் மோசமடைய வழிவகுக்கும்.

◆ தூக்கமின்மை:

தேவையற்ற அளவு சூடான நீரை உட்கொள்வது, குறிப்பாக படுக்கைக்கு முன் குடிப்பது தூக்க பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரவு நேரத்தில் சூடான நீர் உங்களை அதிகமாக சிறுநீர் கழிக்கச் செய்கிறது. மேலும் உங்கள் இரத்த நாள செல்கள் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.

◆ இரத்த அளவை பாதிக்கிறது:

சூடான நீரின் அதிகப்படியான நுகர்வு மொத்த இரத்த அளவை அதிகரிக்கிறது. மேலும் இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இருதய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

எனவே, கவனமாக இருங்கள், COVID-19 க்கான தீர்வாக சுடுநீரை மீண்டும் மீண்டும் குடிக்க வேண்டாம். வெதுவெதுப்பான தண்ணீரை ஒரு நாளைக்கு 1-2 முறை மட்டுமே குடிக்கவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

east tamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

Leave a Comment