குக் வித் கோமாளி புகழ் கொரோனா லாக் டவுனில் சக்திமான் தொடரை பார்த்துவருகிறார். அதன் வீடியோவை அவரே வெளியிட்டு இருக்கிறார் அவர்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலமாக தற்போது பெரிய நட்சத்திரமாக வளர்ந்திருக்கிறார் புகழ். சிவகார்த்திகேயன், சந்தானம் என விஜய் டிவியில் இருந்து சினிமாவில் நுழைத்த பிரபலங்கள் பட்டியலில் தற்போது புகழும் சேர்ந்திருக்கிறார்.
புகழ் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் அரை டஜன் படங்களுக்கும் அதிகம் இருக்கிறது என ஒரே விஜய் டிவி விருது விழாவில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பிஸியான நடிகராக மாறி இருக்கும் புகழ் தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே தான் இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் செய்துள்ள விஷயம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
90ஸ் கிட்ஸ் விரும்பி பார்த்த சக்திமான் தொடரை அவர் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் பார்த்து வருகிறாராம். அதை அவரே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
“ஹாய் மக்களே.. இது மாதிரி லாக்டவுன் நேரத்தில் சில விஷயங்களை நாம் கடைபிடித்து தான் ஆகவேண்டும். பாதுகாப்பாக வீட்டில் உட்கார்ந்து நமது பழைய நினைவுகளுக்கு போவோம் வாங்க” என சொல்லி சக்திமானை பார்க்க தொடங்குகிறார் அவர். மேலும் சக்திமான் போல அவர் கையை தூக்கி சுற்றி கீழேவும் விழுகிறார்.
https://www.instagram.com/tv/CO7RdxYBAF2/?utm_source=ig_embed&ig_rid=2b4f5920-f740-4055-a4e8-f5e1f7e63a35