26.7 C
Jaffna
January 23, 2025
Pagetamil
உலகம்

16 மனைவி, 151 பிள்ளைகள்… 17வது திருமணத்திற்கு ரெடியான ஆண்!

ஜிம்பாவேவை சேர்ந்த ஆண் ஒருவர் 16 பெண்களை திருமணம் செய்து 151 குழந்தைகள் பெற்றுள்ளார். இவர் இப்போது 17வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இறக்கும் வரை திருமணம் செய்வதும், குழந்தை பெறுவதும் இலட்சியம் என கூறுகிறார் இந்த வினோத ஆண்.

நம் ஊரில் ஒரு திருமணம் செய்வதற்குள் ஆண்கள் படாத பாடு படுகின்றனர். இன்னும் சிலருக்கு பெண் கிடைப்பதே சிரமமான விஷயமாக உள்ளது. ஆனால் ஒரு மனிதர் 16 மனைவிகளை திருமணம் செய்துள்ளார். மேலும் அடுத்து 17 வது மனைவியை திருமணம் செய்ய ஆயத்தமாகி வருகிறார்.

ஜிம்பாப்வேயில் 66 வயதான மிஷெக் என்பவரின் இந்த கதை மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. டெயில் மெயில் அறிக்கையின்படி இவர் எந்த வித வேலையும் செய்யவில்லை என்றும் அவரது மனைவிகளை திருப்திப்படுத்துவதையே தனது முழு நேர வேலையாக கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவர் சமைக்கிறார், வீடுகளை சுத்தம் செய்கிறார், தன் மனைவிகளின் ஒவ்வொரு ஆசையையும் அவர் பூர்த்தி செய்கிறார்.

இப்போது இவர் தனது 17 ஆவது மனைவியை குளிர்காலத்தில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக கூறியுள்ளார். மேலும் அவர் இறப்பதற்கு முன்பு 100 மனைவிகளையும் 1000 குழந்தைகளையும் பெற வேண்டும் என லட்சியம் கொண்டுள்ளார்.

38 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த “பலதார மணம்” குறித்து பேசிய அவர் “நான் 1983லேயே பலதார மணம் பற்றிய எனது திட்டத்தை துவங்கினேன். எனது மரணம் வரை இதை நான் நிறுத்துவதாக இல்லை.” என்கிறார்.

இவ்வளவு பெரிய குடும்பம் இருந்தபோதிலும் தனது மனைவிகள் அனைவரும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதில் இரண்டு பேர் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். பல உறுப்பினர்கள் இருப்பதால் ஒரு பெரிய நிதி சுமையை தாங்க வேண்டி உள்ளது.

இது குறித்து அவர் கூறும்போது “என் பிள்ளைகள் எனக்கு பணம் கொடுக்கின்றனர். எனது மகன்கள் மற்றும் எனது வளர்ப்பு மகன்களிடம் இருந்தும் தொடர்ந்து நான் பரிசுகளையும், பணத்தையும் பெற்று வருகிறேன். என் மனைவிகள் ஒவ்வொரு தினமும் எனக்காக சமைக்கிறார்கள். நான் எப்போதும் ருசியான உணவுகளை சாப்பிடுகிறேன். ஒருவேளை எனக்கு உணவுப் பிடிக்காமல் நான் அதை திரும்ப அனுப்பினால் அவர்கள் கோபம் கூடப் படுவதில்லை” என அவர் கூறுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

18,000 இந்தியர்களை வெளியேற்றவிருக்கும் அமெரிக்கா

east tamil

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி

east tamil

மூத்த ஹிஸ்புல்லா தலைவர் சுட்டுக்கொலை

Pagetamil

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

Leave a Comment