வவுனியா இளைஞர்கள் கசிப்பு வேட்டை!

Date:

வவுனியாவின் எல்லைப்பகுதியான கல்மடு கண்டல்வேலி குளப்பகுதியில் கசிப்பு உற்ப்பத்தி செய்யும் இடம் இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவரும் நிலையில் பல்வேறு சமூகப்பிரச்சனைகள் ஏற்ப்பட்டுவந்ததுடன், அதனால் நேற்றயதினம் இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

இதனையடுத்து நேற்றயதினம் இரவு குறித்த பகுதியில் ஒன்றுகூடிய கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கசிப்பு உற்பத்திசெய்யும் இடத்தினை முற்றுகையிட்டதுடன், ஐந்திற்கும் மேற்பட்ட கசிப்பு பெரல்களை மீட்டுள்ளனர்.

எனினும் கசிப்பினை உற்பத்திசெய்த நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விஐயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் செயலாளர் அ.அலெக்ஸ்(சுகேந்திரன்), மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் குறித்த கிராமத்திற்கு இன்று விஐயம் செய்து இளைஞர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்