அழைப்பு வந்தால் நிச்சயம் குக் வித் கோமாளியில் கலந்துகொள்வேன்; டிடி!

Date:

குக் வித் கோமாளி மூன்றாம் சீசன் இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் கலந்துகொள்ள தன்னை கூப்பிட்டால் நிச்சயம் போவேன் என டிடி கூறி உள்ளார்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஜாலியாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு ரசிகர்கள் ஏராளம்.

கடந்த வருடம் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட டிடி அதற்குபிறகு அதிகம் தொகுத்து வழங்குவதில்லை. அவரை மீண்டும் திரையில் பார்ப்பதற்காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஆனால் அவரால் தற்போது அதிக நேரம் நிற்க முடியவில்லையாம், அதனால் தான் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வரவில்லை என கூறியுள்ளார்.

ரசிகர்கள் உடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய டிடி-யிடம் ‘குக் வித் கோமாளி அடுத்த சீசனுக்கு வருவீர்களா’ என ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு பதில் சொன்ன டிடி “Ofcourse கூப்பிட்டால் வரவேண்டியது தான். எனக்கும் அந்த ஷோ ரொம்ப பிடிக்கும். அது blockbuster ஹிட் ஷோ. அந்த ஷோவில் பணியாற்றி தற்போது பெரிய பெரிய ஸ்டார் ஆகி இருக்கும் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்” என டிடி கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்