ஹப்புத்தளை பிரதேசசபையின் கழிவகற்றல் வாகனத்தை பிரதேசசபை தலைவரே தற்போது செலுத்தி வருகிறார்.
ஹப்புத்தளை பிரதேசசபை தவிசாளர் கந்தசாமி கண்ணா கழிவு வாகனத்தை செலுத்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பிரதேசசபையின் கழிவகற்றல் வாகன சாரதி, துப்பரவு தொழிலாளர்கள் என 7 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
அவர்களுடன் தொடர்புடையவர்கள் என பல பிரதேசசபை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் ஹப்புத்தளை பிரதேசத்தில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஹப்புத்தளை பிரதேசசபை தலைவர் கந்தசாமி கண்ணா கழிவகற்றல் வாகனத்தை செலுத்தி சென்று குப்பைகளை அகற்றினார்.




