ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு, இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு பிறகு அங்கேயே தங்கியிருக்கும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் ஆக., 4ம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய வீரர்கள் மே 19ந்தேதி மும்பைக்கு வருவதற்கு முன்பாக 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அந்தப் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வீரர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஜூன் 2ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.