26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
சினிமா

சிம்பு ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் ; சிம்பு இரங்கல்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தன் ரசிகர் குட்லக் சதீஷ் உயிரிழந்தது குறித்து அறிந்த சிம்பு வேதனை அடைந்திருக்கிறார். அவசரப்பட்டு விட்டாய், போய் வா சகோதரா, அழுகையோடு அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியாவில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் பலரும் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிம்பு ரசிகர் மன்றத்தை சேர்ந்த குட்லக் சதீஷ் என்பவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.

 

Image

Image

 

இது குறித்து அறிந்த சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

அன்பு தம்பியும், “காதல் அழிவதில்லை” படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரருமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்திருக்கிறேன்.கொரோனா என்றவுடன் மருத்துவ உதவிக்கெல்லாம் பேசி, நம்பிக்கையோடு மீண்டு வருவாய் என்று ஆறுதல் சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பினேனே…?!அங்கு எடுத்துப் போகும் உடல்களைப் பார்த்ததும் பயந்தது ஏன் சகோதரா?பயந்து உன் இதயத் துடிப்பை நிறுத்திக் கொண்டது என் சகோதரா?உன் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைக்காமல் போனதேன் சகோதரா?? துயர் கொள்கிறேன்.உன்னை இழந்துவிட்டதை நம்ப முடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன்.நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய், போய் வா சகோதரா, அழுகையோடு அனுப்பி வைக்கிறேன்.ரசிகர்களே.. நண்பர்களே… சகோதர சகோதரிகளே… நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலை குலையாதீர்கள்.பயம் தான் நம்மை வீழ்த்துகிறது, பயம் தான் நாம் நோயிலிருந்து குணமாவதைத் தடுக்கிறது.சாதாரண நோயை தீவிர நோயாக்குவதும் பயம் தான். நிலைகுலைதல் தான் இதயத்தைத் தாக்குகிறது.தயவுசெய்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம்.நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். அதேசமயம் மனத்திடத்தையும் பெருக்கிக் கொள்வோம்.தேவையான மருத்துவம் பார்ப்பதோடில்லாமல் தேவையற்று வெளியே செல்வதைத் தவிர்ப்போம்.இழப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது. பாதுகாப்பாக இருப்பதே கொரோனாவை விரட்டும் மருந்து. புரிந்துகொள்வோம்.சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை.வருத்தங்களுடன் முடிக்கிறேன்.

சிலம்பரசன் என்று தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment