வவுனியா வடக்கில் மேலுமொரு இடத்தில் பௌத்த சின்னமாம்: மன்னகுளத்தையும் மடக்குகிறது தொல்லியல் திணைக்களம்!

Date:

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மன்னகுளம் பகுதியில் பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான ஆதாரம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகம் 255 B கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மன்னகுளம் பகுதியில் தொல்பொருள் சின்னங்களை கொண்ட ஒரு தளம் காணப்படுவதாக சிங்க ரெஜிமென்டின் 16 வது படைபிரிவின் கட்டளை அதிகாரியின் அறிவிப்பை தொடர்ந்து வவுனியா தொல்பொருள் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் 60-70 செ.மீ உயரத்திற்கு இடைப்பட்ட 12 கற் தூண்களை கொண்ட கட்டிட அமைப்பும் அதில் சிங்கள எழுத்தினால் பூஜை தொடர்பாக எழுதப்பட்டிருப்பதாகவும் கி.மு 8,9 ஆம் நூற்றாண்டுகளுக்குரியது எனவும், அங்கு பழைய கட்டிடங்களுக்கான செங்கல் மற்றும் ஒடுகள், இருப்பதாகவும் இக் கட்டிடம் 50 சதுர மீற்றர் பரப்பளவை கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் தாெல்லியல் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வவுனியா வடக்கில் வெடுக்குநாறிமலை, கோடலிபறிச்சான் என தாெடர்ந்து தற்போது மன்னகுளம் பகுதியையும் தாெல்லியல் திணைக்களம் உரிமை கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்