25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இந்தியா

செல்பி எடுக்க முயற்சித்த வாலிபர்; 120 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

வாணியம்பாடி அருகே டிராக்டரில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சித்த வாலிபர் 120 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சின்ன மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சஞ்சீவி. இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது உணவருந்துவதற்காக உழுவதை நிறுத்திவிட்டு டிராக்டர் ஓட்டுநர் சென்றுள்ளார்.

இதற்கிடையில், டிராக்டரை ஓட்டுவதை போல செல்பி எடுத்துக்கொள்ள நினைத்த சஞ்சீவி, டிராக்டரில் ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் டிராக்டரை இயக்க முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்ததால் சஞ்சீவி டிராக்டருடன் அருகிலிருந்த 120 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் வாலிபர் கிணற்றுக்குள்ளேயே உயிரிழந்தார். இதனை கண்ட விவசாயிகள் உடனே வாணியம்பாடி காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சுமார் 5 மணி நேரம் போராடி இளைஞரை சடலமாக மீட்டனர்.

செல்பி மோகத்தால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் ஊரடங்கு போடப்பட்ட பின்னரும், டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னரும் இதுபோன்ற விபத்துகள் குறைந்து இருந்தன. இந்த நிலையில், செல்பி மோகத்தால் டிராக்டரை இயக்க தெரியாமல் இயக்கி நொடி பொழுதில் உயிரை விட்ட வாலிபரின் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் கிணற்றுக்குள் விழுந்து இறப்பதற்கு முன்பு டிராக்டரில் அமர்ந்து எடுத்த செல்பியை வாட்சப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். உயிரை விடுவதற்கு முன்னதாக அவர் எடுத்த கடைசி புகைப்படத்தை வாலிபரின் உறவினர்களும், நண்பர்களும் பார்த்து கதறி அழுத நிகழ்வு காண்போரின் நெஞ்சங்களை உலுக்கியது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வாலிபரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment