நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் ஆங்காங்கே நிகழும் இறப்புகள் மற்றும் மற்ற நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்து மக்களும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் தான் நிறைய பேர் மாரடைப்பு ஏற்பட்டு கொரோனாவுக்கு பலியாவதாகவும் தகவல் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் கொரோனா இருப்பதால் மாரடைப்பு ஏற்படும் என்பது தவறு ஊகம். கோவிட் 19 தொற்று ஏற்பட்டால் சுவாசம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் மார்பு வலி ஏற்படக்கூடும். எனவே மார்பு வலிக்கும் கொரோனா தொற்றுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
எனவே, உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று சோதனையில் தெரிய வந்தால், சுவாச பிரச்சினைகளால் உங்களுக்கு மார்பு வலி ஏற்படக்கூடும் என்பதால் முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனையும் மருத்துவ உதவியும் பெற்றுக்கொள்வது நல்லது.
சரி வேறென்னென்ன அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.கோவிட் 19 தொற்று ஏற்பட்டால் மிக கடுமையாக வறட்டு இருமல் ஏற்படக்கூடும்.நுரையீரலுக்கு காற்றுச் செல்லாமல் காற்றுப்பைகளில் ஏற்படும் அழற்சியால் நிமோனியா போன்ற சுவாச பிரச்சினைகள் ஏற்படும்.
அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களில் நிறைய பேருக்கு நுரையீரல் தொற்று ஏற்படுவதால் நுரையீரலில் ஏற்படும் வீக்கம் காரணமாக மார்பு வலி ஏற்படவும் வாய்ப்புண்டு.
ஏற்கனவே இதயம் சம்பந்தமான பிரச்சினை இருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏனெனில், கோவிட்-19 தொற்று காரணமாக மயால்ஜியா, மயோகார்டிடிஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
கொரோனா வைரஸ் இரத்தத்தில் பரவும் என்பதால் இரத்தத்தில் உறைவு ஏற்படும் போது நுரையீரலுக்கு இரத்தம் போவது தடைபடும் வாய்ப்புண்டு.எனவே, மார்பில் ஏதேனும் அசௌகரியம் இருந்தால் முன்கூட்டியே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.