பிசிஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே வைத்து கண்காணிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைடுத்து அவருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் அல்லது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இந்த நடைமுறையை பின்பற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பையடுத்து, சிகிச்சை நிலையங்களில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1