ஏ9 வீதியில் வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் பல வங்கிகளின் காசோலைகள் வீதியோரங்களில் இன்று காலை வீசப்பட்டுள்ளது.
வவுனியாவில் வீசப்பட்டவை 2014 ஆம் ஆண்டுக்குரிய பல வங்கிகளுக்குரியதாக காணப்பட்டதுடன் அவை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குரியதாகவும் காணப்பட்டது.
அதிகளவான காசோலைகள் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்ததாக காணப்பட்டன.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு சந்தி மற்றும், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுவரித்திணைக்கள அலுவலகத்தை அண்மித்த பகுதியிலும் இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளன.
வீசப்பட்டுள்ள காசோலைகள் அரச மற்றம் தனியார் வங்கிகளினுடையது என்பதுடன், அவை பயன்படுத்தப்பட்டும் உள்ளன. ஏ9 வீதியில் இவ்வாறு காசோலைகள் வீசப்பட்டுள்ளமையானது கேள்விகளை எழுப்பியுள்ளது. பயன்படுத்தப்பட்ட காசோலைகள் எனினும் அது என்ன நோக்கத்திற்காக வீசப்பட்டுள்ளன என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட காசோலைகள் இவ்வாறு வீதியில் வீசப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிசாரு்ம, பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
