இன்று (14) வட மாகாணத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வடமாகாணத்தை சேர்ந்த 585 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 48 பேர், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருவர், மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.
முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
கிளிநொச்சியில் தொற்றாளர்களின் முதல்நிலை தொடர்பாளர்களான 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் இருந்து 7 பேரும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 40 பேரும், சிறைச்சாலையிலிருந்து ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.
யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் செர்க்கப்பட்ட 4 பேர், திருநேல்வேலி தனியார் வைத்தியசாலையில் ஒருவர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், கரவெட்டி சுகாதார வைததிய அதிகாரி பிரிவில் ஒருவர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும் தொற்றிற்குள்ளாகினர்