முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் அனுமதியுடன், முள்ளிவாய்க்கால் நினைத்தூபியில் புதிய நினைவுக்கல் நாட்டும் பணி நேற்று மேற்கொள்ளப்படவிருந்த போது, பொலிசாரும் இராணுவத்தினரும் அதற்கு தடையேற்படுத்தினர்.
இரவு இந்த பகுதியை இராணுவம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சமயத்தில் தூபி உடைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பில் ஏற்பாட்டு குழு இன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1