பிரபல இயக்குனரின் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் கலைப்புலி தாணு!

Date:

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா புதிய படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஸ்காவை தான் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்ரமன் தானுடவிடம் இரண்டு ஸ்கிரிப்ட்களைக் கூறியுள்ளார். பிரண்ட்ஷிப் மற்றும் காதல் என்ற இரு ஸ்கிரிப்ட்கள். அதில் காதல் கதை தாணுவுக்கு பிடித்துப் போகவே அந்தக் கதையைத் தயாரித்தார்.

பரத் மற்றும் ஜெனிலியா நடிப்பில் ‘சென்னை காதல்’ என்ற படத்தை விக்ரமன் இயக்கினார். ஆனால் அந்தப் படத்தின் தோல்வியைத் தழுவியது. அதையடுத்து விக்ரமனின் மீதி சம்பளம் 17 லட்சம் ரூபாயைக் கொடுப்பதற்காக தாணு இயக்குனர் விக்ரமனின் வீட்டிற்குச் சென்றபோது, படம் தோல்வியைத் தழுவியதால் அந்தப் பணத்த வாங்க மறுத்துவிட்டாராம்.

விக்ரமனின் இந்த நல்ல குணத்தைப் பார்த்து பிடித்துபோன தாணு விக்ரமனின் மகன் கனிஷ்காவை சினிமாவில் அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளாராம். கனிஷ்கா திறமை கொண்டவர், பெரிய ஹீரோவாக மாறுவதற்கான அனைத்து குணங்களும் அவரிடம் இருப்பதாகவும் தாணுவே தெரிவித்துள்ளாராம்.

எனவே கூடிய சீக்கிரம் விக்ரமனின் மகனைத் திரையில் பார்க்கலாம்!

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்