நான் நலமாக இருக்கிறேன்; கொரோனா தொற்று இல்லை: 90களின் குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர்ஹீரோ சக்திமான்!

Date:

மகாபாரதம், சக்திமான் உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் முகேஷ் கண்ணா. குறிப்பாக சக்திமான் கதாபாத்திரத்தை இயக்கி, நடித்தது இவருக்கு மொழிகளைக் கடந்து அங்கீகாரம் பெற்றுத் தந்தது. 90களின் குழந்தைகளுக்குப் பிடித்த சூப்பர்ஹீரோவாக சக்திமான் இருந்தார்.

இந்நிலையில், தற்போது 62 வயதான முகேஷ் கண்ணா கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர் காலமானதாகவும் கூட திடீரென செய்திகள் இணையத்தில் பரவ ஆரம்பித்தன. இதற்கு மறுப்பு தெரிவித்து முகேஷ் கண்ணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதில், “நான் நல்ல நலத்துடன் இருக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்லவே இங்கு வந்தேன். புரளிகளுக்கு மறுப்பு தெரிவிக்கச் சொன்னார்கள். அதைச் செய்ய விரும்புகிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு உங்கள் ஆசீர்வாதங்கள் இருக்கின்றன.

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. நிறைய அழைப்புகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் நான் நலத்துடன் இருப்பதை என் ரசிகர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று இங்கு வந்தேன். உங்கள் ஆசீர்வாதங்களுடன் நான் நலமாக, பாதுகாப்பாக இருக்கிறேன்.

எனக்கு கொரோனா தொற்று இல்லை, மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை. பொய்யான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” என்று முகேஷ் கண்ணா பேசியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்