நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை
செந்தமிழன் காலமாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி, “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமானின் சொந்த ஊராகிய சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் உடல்நலக் குறைவு காரணமாக செந்தமிழன் மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சீமானுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1