அறுவை சிகிச்சைக்கு பின் அவுஸ்திரேலிய பெண் அயர்ந்லாந்து நாட்டுக்காரரை போல பேசியது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலிய நாட் சேர்ந்த கிய மெசியன் என்று பெண்ணுக்கு அண்மையில் டான்சிலில் ஏற்படட அழற்சி காரணமா அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிந்து வழக்கம் போல அவர் பேச முயன்ற போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அது அவரது வார்த்தை உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றம்தான், அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் அயர்ல்ந்து நாட்டுக்காரரை போல வார்த்தைகளை உச்சரித்ததை கண்டறிந்தார்.
சிகிச்சையால் தான் உச்சரிப்பை மாறியதாக நினைத்தார். உறவினர்கள் நண்பர்களிடம் பேசிய போது வார்த்தை உச்சரிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பின்னர் மருத்துவரை அணுகிய போது தான் அவருக்கு FOREIGN ACCENT SYNDROME என்ற குறைபாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆசியில் பிறந்து தற்போது அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் போல பேசி வரும் இந்த பெண், ஒவ்வொரு நாள் விடியும் போது பழைய உச்சரிப்பு திரும்பும் என காத்திருப்பதாக கூறினார்.
FOREIGN ACCENT SYNDROME என்ற குறைபாடு முதன்முதலில் 1907 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அன்று முதல் இன்று வரை இதுபோன் குறைபாடு உள்ளவர்கள் 100 பேர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.