கிளிநொச்சியில் 12 வயது சிறுவன் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

Date:

அயலவர்களால் கூரிய ஆயுதத்தால் 12 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் நேற்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேலியை சீர் செய்வதற்காக சென்ற சிறுவன் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டமையால் சத்திர சிகிச்சை கூடத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் 119 எனும் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டும் பொலிசார் விசாரணை மெற்கொள்ள தவறியுள்ளதாகவும், இன்று (13) காலை 11 மணியளவிலேயே ஆரம்ப விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் அலட்சியமாக பொலிசார் செயற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுகின்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் 12 வயதுடைய தர்சிகன் என்ற சிறுவனே பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்கள விசாரணைகளை மேற்கொண்டு, தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி பெற்று தரவேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்