கங்கை நதியில் சடலங்கள் மிதக்கும் அவலம் : வலைகள் அமைத்து சடலங்களை கைப்பற்றும் பீகார்!

Date:

பாட்னா: கங்கை நதியில் மிதந்து வரும் மனித சடலங்களை கைப்பற்ற வலைகள் அமைத்து கரையோரம் கடலங்கள் அடக்கம் செய்யப்படுகிறது.

பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் கங்கை நதியில் கடந்த 10ம் தேதி 71 உடல்கள் மிதந்து வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடல்களை கைபற்றி அடக்கம் செய்தனர். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்று பீகார் மாநில அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உடல்கள் அனைத்தும் ஏறக்குறைய 5 முதல் 7 நாட்கள் வரை தண்ணீரில் மிதந்து வந்திருக்க வேண்டும்.

இவை உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி போன்ற நகரங்களில் இருந்து வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய போதிய பண வசதி போன்றவை இல்லாதவர்கள் இவ்வாறு கங்கை நதியில் உடல்களை தூக்கி வீசியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கங்கை நதியில் 71 உடல்கள் மிதந்து வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் வலைகளை அதிகாரிகள் அமைத்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் இருந்து கங்கை நதியில் வீசப்படும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்ற கங்கை நதியில் பல்வேறு இடங்களில் இந்த வலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பீகார் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்