திருமணத்தின்போது ஜுவாலா கட்டா தன் தாயாருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி அவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது.
இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சியும் நல்லபடியாக நடந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் விஷ்ணு விஷால் திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரும் தான் கலந்து கொண்டார்கள்.
திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைஜுவாலா கட்டா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, கண்ணு பட்டிருக்கும், சுத்திப் போடுங்க விஷ்ணு விஷால் என்றார்கள்.
இந்நிலையில் தன் அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ஜுவாலா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். திருமண நிகழ்ச்சியின்போது ஜுவாலா தன் தாய்க்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் அது.
அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,
அம்மாவுக்கு போய் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பதா?. எல்லாத்துக்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா?. பிரபலங்கள் ஏன் பெற்றோருக்கும், பெத்த புள்ளைகளுக்கும் லிப் டூ லிப் முத்தம் கொடுக்கிறீர்கள்?. இது சரியில்லை ஜுவாலா.
உங்கள் மதத்தில் திருமணம் முடிந்த கையோடு அம்மாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த லிப் டூ லிப் விவகாரத்திற்காக அடிக்கடி விமர்சிக்கப்படுபவர். அவர் தன் செல்ல மகள் ஆராத்யாவுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும்போது அதை புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்.
இந்நிலையில் தான் ஜூவாலாவும் லிப் டூ லிப் முத்தத்தால் விமர்சிக்கப்படுகிறார். முன்னதாக விஷ்ணு விஷாலும், அவரின் காதல் மனைவியான ரஜினி நட்ராஜும் பிரிய ஜுவாலா தான் காரணம் என்று கூறி ரசிகர்கள் அவரை விளாசினார்கள். இதை பார்த்த விஷ்ணு விஷாலோ, தன் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிய ஜுவாலா காரணம் இல்லை என்று விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.