Pagetamil
சினிமா

கிங்காங்கிற்கு போன் செய்து பேசிய ரஜினி; ஆடியோவை ஷேர் செய்யும் ரசிகர்கள்!

நகைச்சுவை நடிகர் கிங் காங்கிற்கு திடீர் என்று போன் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். மேலும் விரைவில் அவரை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் வெளியான அதிசய பிறவி படத்தில் நடித்தவர் கிங் காங். அவர் பல படங்களில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கையால் வாங்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் ரஜினி கிங் காங்கிற்கு போன் செய்து பேசியிருக்கிறார். அந்த ஆடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.

ரஜினி கிங் காங்கிடம் கூறியதாவது,

உங்களின் வீடியோவை பார்த்தேன். எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அந்த விருதை என் கையால் வாங்க வேண்டும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்கு அந்த மெசேஜே வரவில்லை. சென்னையில் தானே இருக்கிறீர்கள்?. நானும் ஊரில் தான் இருக்கிறேன். இந்த குவாரன்டீன் எல்லாம் முடியட்டும் கண்ணா. அடுத்த மாதம் நாம் சந்திக்கலாம். வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா என்றார்.

அதன் பிறகு கிங் காங்கின் அம்மா ரஜினியிடம் பேசினார். அப்பொழுது ரஜினி கூறியதாவது,

எனக்கு கிங் காங்கை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த விருது விஷயம் எனக்கு தெரியவே இல்லை. யாரும் சொல்லவில்லை. இப்போ தான் தெரிந்தது. இந்த கொரோனா கொஞ்சம் கம்மியான உடனேயே நான் பார்க்கிறேன் என்றார்.

மீண்டும் கிங் காங்கிடம் பேசிய ரஜினியோ, படம் ஏதாவது வேண்டுமானால் வெட்கப்படாமல் என்னிடம் கேளுங்கள். அடுத்த மாதம் சந்திக்கலாம் என்றார்.

குடும்பத்துடன் வந்து உங்களை சந்தித்து புகைப்படம் எடுக்க அம்மா விரும்புகிறார்கள் என்று கிங் காங் கூறியதற்கு, கண்டிப்பாக என்றார் ரஜினி.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த ரஜினி ஊர் திரும்பிவிட்டார். ஊர் திரும்பியதும் அவர் கிங் காங்கிற்கு போன் செய்து பேசியது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

Leave a Comment