இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 2, 357 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 4 பேர் பலியாகினர். ஸ்காட்லாந்து, ஐயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் கொரோனாவினால் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மூத்த மருத்துவ ஆலோசகரும், தலைவருமான கிரிஸ் விட்டி கூறும்போது, “ பொதுமக்களுக்கும், கொரோனா தடுப்பூசி திட்டங்களுக்கு எனது நன்றி. தடுப்பூசி காரணமாக பிரிட்டனில் பல பகுதிகளில் கரோனா குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்தை வேகமாக செலுத்தியதன் காரணமாக அங்கு கொரோனா தொற்று 65 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக 2,000-க்கும் குறைவானவர்களே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
உலக அளவில் கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்துவதில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை வகித்து வருகின்றன.உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.