நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 65. முதல்கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்தினார்கள். இதையடுத்து சென்னையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள். இந்த மாதமே துவங்க வேண்டிய படப்பிடிப்பு, கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் போன்று செட் அமைக்கும் பணி நடந்து வந்தது.
சென்னையில் கொரோனா வைரஸ் பிரச்சனை தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் ஷாப்பிங் மால் செட் அமைக்கும் பணியை தொடர வேண்டாம், உடனே நிறுத்துங்கள் என்று விஜய் கூறினாராம். செட்டில் வேலை பார்ப்பவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றாராம் விஜய். இதையடுத்து செட் அமைக்கும் பணியை உடனே நிறுத்தி வைத்துள்ளனர். விஜய் இவ்வாறு கூறியது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
தளபதி 65 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவனை விஜய்க்கு வில்லனாக்கும் முயற்சியும் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. விஜய்க்கு வில்லன் யார் தான்யா என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார் பூஜா ஹெக்டே. தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக இருக்கும் பூஜாவை தளபதி 65 படத்தில் நடிக்கக் கேட்டதும் உடனே ஓகே சொன்னாராம். மேலும் கஷ்டப்பட்டு டேட்ஸை அட்ஜஸ்ட் செய்து கொடுத்தாராம். விஜய் படத்தை தவறவிட்டுவிடக் கூடாது என்று தான் இத்தனையும் செய்தாராம் பூஜா. தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.