25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
சினிமா

அபிஷேக் பச்சனிடம் இருந்து ஐஸ்வர்யா ராயை கவர விரும்பிய பாலிவுட்டின் மூத்த நாயகன்!

பாலிவுட்டின் மூத்த நாயகனான நடிகர் இம்ரான் ஹஷ்மி, ஐஸ்வர்யா ராயை அவரின் கணவர் அபிஷேக் பச்சனிடம் இருந்து அபகரிக்க விரும்புவதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது பற்றி தற்போது பேசப்படுகிறது.

பாலிவுட் படங்களில் நடிகைகளுக்கு முத்தம் கொடுப்பதற்கு பெயர் போனவர் நடிகர் இம்ரான் ஹஷ்மி. மேலும் மனதில் பட்டதை பேசுபவதற்கும் பெயர் போனவர். அவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் பற்றி முன்பு தெரிவித்தது குறித்து தற்போது பேசப்படுகிறது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய காபி வித் கரண் நிகழ்ச்சியில் தான் ஐஸ்வர்யா ராய் பற்றி பேசினார் இம்ரான் ஹஷ்மி. அவராக பேசவில்லை, கரண் கேட்ட கேள்விக்கு ஆர்வக்கோளாறில் பதில் அளித்துவிட்டார்.

சக நடிகர்களிடம் இருந்து நீங்கள் திருட விரும்புவது எது என்று இம்ரான் ஹஷ்மியிடம் கரண் ஜோஹர் கேட்டார். அப்பொழுது அபிஷேக் பச்சனிடம் இருந்து எதை திருட விரும்புகிறீர்கள் என்று கரண் கேட்க சற்றும் யோசிக்காமல், அவரின் மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் என பதில் அளித்தார் இம்ரான்.

நடிகர் ரன்பிர் கபூரிடம் இருந்து எதை திருட விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவரின் காதலிகள் என்றார் இம்ரான். ரன்பிர் கபூர் வாழ்வில் காதல் வருவதும், போவதுமாக இருக்கிறது. நடிகைகள் தீபிகா படுகோன், கத்ரீனா கைஃப் ஆகியோர் ஒரு காலத்தில் ரன்பிர் கபூரை காதலித்தார்கள்.

தற்போது ரன்பிர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி ரன்பிரை விடுங்க, நடிகர் சயிஃப் அலி கானிடம் இருந்து அவரின் மனைவி கரீனா கபூரை திருட விரும்புவதாக கூறினார் இம்ரான். ஆக சக நடிகர்களின் மனைவி, காதலிகளை திருட விரும்புகிறார் இம்ரான் ஹஷ்மி.

அதே நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் என்கிற வார்த்தையை கேட்டதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன என்று கரண் கேட்க, ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று பதில் அளித்து பலரையும் அதிர வைத்தார் இம்ரான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment