26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
ஆன்மிகம்

இன்றைய நாளுக்கான ராசிபலன் (11.05.2021)

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம்

நேயர்களுக்கு அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் உடல் சோர்வை உணர்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள், கணவன் மனைவி உறவு சற்று வாக்குவாதங்கள் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்வார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.

ரிஷபம்

நேயர்களுக்கு இந்த நாள் அலைச்சலோடு கூடிய நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் கூடுதல் கவனத்தை தன்னுடைய தொழில் மீது திருப்ப வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டாலும் நல்ல பலன் உண்டு. பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.

குழந்தைகளுக்கான கல்வி செலவுகள் சற்று கூடுதல் ஆனாலும் மனநிம்மதி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டு. தனவரவு இருக்கும்.

மிதுனம்

நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இது உள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள்.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.

உடன்பிறந்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. சற்று அலைச்சல் கூடிய நாடாக இருந்தாலும் மனநிம்மதியும் வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வியை முடித்து வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

சிம்மம்

பல புதிய வாய்ப்புகளை அள்ளித் தரும். இனிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும்.

காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான சந்திப்புகள் உண்டு. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். சொத்துக்கள் வாங்குவது, திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது ஆகிய இவைகள் வெற்றி தருவதாக இருக்கும்.

சிம்மம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாக செல்லும். உடல் நலம் நன்றாக இருந்து வரும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகள் நன்மையில் முடியும்.

விசா தொடர்பான காரியங்களை வெற்றிகரமாக முடிக்கலாம்.. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள் நண்பர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். சொந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்தில் தங்கள் திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமையும். கலைத்துறை பத்திரிக்கைத்துறை மற்றும் விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

நேயர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக அமையும். சற்று அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணும் நாளாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

துலாம்

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை ஆயில் அண்ட் கேஸ் மென்பொருள் துறையில் உள்ளவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு நாடு விட்டு நாடு மாறுவது போன்ற சிந்தனைகள் செயல்பாடுகள் இருக்கும் இவைகளில் வெற்றி காண்பீர்கள்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வரவு தனவரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடிவதாகவும் நல்ல தகவல்கள் கிடைக்கும் நாளாகும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

விருச்சிகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வருவதற்கான உகந்த நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். புதிய படிப்புகளுக்கான கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்கும். கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் இன்று உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அந்நியோன்னியமாக இருக்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை மேம்பட காண்பீர்கள். பெண்களுக்கு இனிய நாள் ஆகும்.

தனுசு

நேயர்களுக்கு இந்த நாள் ஒரு நல்ல நாளாகவே இருக்கிறது. தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் எதிர்பார்த்த பணவரவு உண்டு. பிரயாணம் வெளியூர் வாசம் போன்றவற்றிற்கான திட்டமிடுதல் அவை சம்பந்தப்பட்ட சிந்தனைகள் ஏற்படும் காலம் இது. மனதில் மகிழ்ச்சி நிலவும் முகம் பிரகாசமாக தோன்றும்.

எடுக்கும் காரியங்களில் வெற்றி நிச்சயம் இறைவன் அருள் துணை நிற்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அனுகூலம் உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாங்கள் விரும்பத்தக்க இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். ஒரு சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. படிப்பை முடித்து வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

மகரம்

நேயர்களுக்கு இந்த நாள் சிறப்பான தொரு நாளாகவே அமையும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். வெளிநாடு வெளியூர் போன்றவற்றில் உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு வருவதால் புதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு இருந்தாலும் செலவினங்கள் சற்று கூடுதலாக தெரியும். ஒரு சில பேருக்கு அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பயனும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும் காலம் இது.

கும்பம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மற்றும் நண்பர்கள் உறவினர்களால் ஆதாயம் உண்டு மகிழ்ச்சியும் இருக்கும். சேவை தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும்.

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளையும் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்ற நல்ல முன்னேற்றங்களை காண்பார்கள்.

மீனம்

அன்பர்களுக்கு இனிய நாள்ஆக இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். விசா தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்குவரும் நல்ல நாள் ஆகும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

உங்கள் பேச்சிற்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறிய அளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும்.

உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பல புதிய பாதைகளில் தென்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். தொழில் முன்னேற்றம் அடையும். வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடுகளில் உத்தியோகம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் பல புதிய விஷயங்களை சாதிப்பீர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment