கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கிவரும் ‘சர்தார்’ படத்துக்காக சென்னையில் ரூ.2 கோடியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டது. இங்கு கார்த்தி மற்றும் படத்தின் நாயகிகளான ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா இடம்பெறும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டன.
அதிக நபர்கள் இடம்பெறும் காட்சி என்பதால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. கரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில், பலர் இடம்பெறும் காட்சிகளை படமாக்குவது சாத்தியம் அல்ல என்பதால், அந்த அரங்கில் நடத்தப்பட வேண்டிய படப்பிடிப்பை தற்போதைக்கு நிறுத்தி வைத்துவிட்டு, மற்ற காட்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது படப்பிடிப்பு குழு.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1