அசாம் முதல்வராக பதவியேற்ற பாஜக தலைவர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.முன்னதாக இன்று, குவாஹாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவா கலக்ஷேத்திரத்தில் ஆளுநர் ஜெகதீஷ் முகியால் அசாமின் 15’வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பாரம்பரியமான ‘பாட் பட்டு’ தோதி மற்றும் குர்தாவில் கழுத்தில் ஒரு முகா ‘காமோசா’ அணிந்திருந்த சர்மா, அஸ்ஸாமி மொழியில் பதவியேற்றார் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். அவருடன், 14 சட்டமன்ற உறுப்பினர்களும் கடுமையான கொரோனா நெறிமுறைகளுக்கு மத்தியில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

“ஹிமந்தா பிஸ்வா ஜி மற்றும் இன்று பதவியேற்ற மற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த குழு அசாமின் வளர்ச்சி பயணத்திற்கு வேகத்தை அதிகரிக்கும் மற்றும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் பிரதமர் பாராட்டினார். “எனது மதிப்புமிக்க சகா சர்பானந்த் சோன்வால் ஜி கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் சார்பு மற்றும் மேம்பாட்டு சார்பு நிர்வாகத்தின் தலைமையில் இருந்தார். அசாமின் முன்னேற்றத்திற்கும் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கும் அவர் அளித்த பங்களிப்பு மகத்தானது.” என்று அவர் கூறினார்.
பாஜக தலைமையிலான கூட்டணி இப்போது முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களில் 75 இடங்களைப் பெற்றது. பாஜக கட்சி மட்டும் 60 இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.




