24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
சினிமா

ஒக்சிஜனுடன் கூடிய பெட் கிடைக்குமானு உருக்கமாக கேட்ட இளம் நடிகர் மரணம்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராகுல் வோரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 35. இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அவர் ஃபேஸ்புக்கில் உருக்கமான போஸ்ட் போட்டிருந்தார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராகுல் வோரா உயிரிழந்தார். அவரின் மரண செய்தி அறிந்த சக நடிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை லட்சங்களிலேயே இருக்கிறது. சிகிச்சை கிடைக்காமல், சிகிச்சை கிடைத்தாலும் பலனில்லாமல் பலர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ராகுல் வோராவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ராகுல் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பிரபலமானவர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராகுல் நேற்று காலை உயிரிழந்தார். அன்று மதியமே அவரின் இறுதிச் சடங்கு நடந்தது. இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ராகுல் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது, எனக்கு நல்ல சிகிச்சை கிடைத்திருந்தால் என்னை காப்பாற்றியிருக்க முடியும். நான் மீண்டும் பிறந்து வருவேன் மற்றும் சில நல்ல காரியங்களை செய்வேன். தற்போது எனக்கு நம்பிக்கை எல்லாம் சுத்தமாக போய்விட்டது என்றார்.

ராகுல் இறந்தது குறித்து நாடக இயக்குநர் அரவிந்த் கௌர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, ராகுல் போய்விட்டார். திறமையான நடிகர் தற்போது உயிருடன் இல்லை. நல்ல சிகிச்சை கிடைத்திருந்தால் என்னை காப்பாற்றியிருக்க முடியும் என்று ராகுல் நேற்று தான் என்னிடம் கூறினார். அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள் ராகுல். உங்களுக்கு என் அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய பெட் வேண்டும் என்று கேட்டு ராகுல் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டிருந்தார். அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருந்ததாவது, எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறேன். ஆனால் ஒரு பலனும் இல்லை. என் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே இருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய பெட் கிடைக்குமா?. என்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. என் குடும்பத்தாரால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்பதால் தான் வேறு வழியில்லாமல் இந்த போஸ்ட் போடுகிறேன் என்றார். கொரோனா பாதிப்பால் ராகுலின் நுரையீரல் பாதிக்கப்பட்டது. அதனால் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. ராகுலுக்கு ஜோதி திவாரி என்கிற மனைவி இருக்கிறார். 35 வயதில் ராகுல் இறந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

Leave a Comment